ஒரிஸ்ஸாவில் தலித் எம்.எல்.ஏ, மீது தீண்டாமை கொடுமை!


JULY 25, புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரப்பூர்வமான கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தரம் குறைந்த தட்டுக்களில் உணவு அளிக்கப்படுகிறது. பிறருடன் வாழவும், பழகவும் வாய்ப்பு தருவதில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பிறருடன் உணவு அருந்த தன்னை அனுமதிக்கவில்லை என காசிநாத் குற்றம் சாட்டியுள்ளார். பி.ஜெ.டி கட்சியின் எம்.எல்.ஏவான காசிநாத் இவ்விவகாரத்தில் தலையிட சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.