தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் எழுச்சிக் கருத்தரங்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான சமூக நல்லிணக்கப் பேரவையின் சார்பில், கடந்த 30.7.2011 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள்அரசியல் எழுச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
'தனியார் துறைகளில் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றில் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தொகுதி முறையை வழங்கிட வேண்டும்; ராஜேந்திர சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு இமாம் சம்சுதீன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் ஆலிம் அகமது ஷா, அதிரை இப்ராஹிம், ஆளூர் ஷாநவாஸ், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரகுமான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை நிகழ்த்தினார்.