சென்னை: ஊராட்சி தலைவர்களுக்கு துப்பாக்கி வழங்க ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் நேற்று அளித்த பேட்டி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையூத்து பஞ்சாயத்து பெண் தலைவரான அருந்ததியர் பிரிவை சேர்ந்த கிருஷ்ணவேணி கடுமையாக தாக்கப்பட்டார். இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊராட்சி தலைவர்கள் தங்களை தற்காத்து கொள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அரசே தற்காப்பு ஆயுதம் (கைத்துப்பாக்கி) வழங்க வலியுறுத்தி, அடுத்த மாதம் 7ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும்.