திருவண்ணாமலை:திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று தலித் விடுதலை இயக்கம் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்க மாவட்டச்செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார். மகளிர் அணி பானு, ஒன்றிய அமைப்பாளர் ஜெயக்கொடி, முனியம்மாள், ஒன்றியச்செயலாளர் கிச்சான், பூங்கொடி முன்னிலை வகித்தனர்.
நகர துணைத்தலைவர் நதியா வரவேற்றார். மாநில இணைப் பொதுச்செயலாளர் ச.கருப்பையா, மாநிலத்தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் ராஜகோபால், திருப்பூர் மாவட்டச்செயலாளர் ஆர்.என்.சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.
இதில், தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் முடித்து வைத்து பேசினார்.