தலித் விடுதலை பேரவை: மாநில ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி தலித் விடுதலை பேரவை மாநில ஆலோனைக் கூட்டம் கோர்க்காட்டில் நடந்தது.தலித் விடுதலை பேரவை மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரிக்கலாம்பாக்கம் - உறுவையாறு சாலை வரை மின் விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். கோர்க்காடு பேட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும். நெசனூர் அம்மன் கோவில் அருகில் ஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். உறுவையாறு பேட்டில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் புதிய மாநில அரசியல் குழு தலைவர் முத்துகிருஷ்ணன், ஏம்பலம் தொகுதி தலைவர் கல்விக்காத்தான் மாநில துணை செயலாளர் வீரமணி, துணை பொதுச்செயலாளர் ரகோத்தமன், மாநில செயலாளர் வீரகோபால், கிறிஸ்தவ அணி மாநில செயலாளர் பாபுராஜ், தொண்டர் அணி தலைவர் மித்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.