சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்த எதிர்மறையான படமாக ஆராக்ஷன் வந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் இன்னமும் பல்வேறு கொடுமைகளை எதிர்நோக்கி வரும் தலித் மக்களுக்கு எதிரான படமாக ஆராக்ஷன் பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் சமூக அமைதியைக் கெடுக்கும், ஒடுக்கப்பட்ட இன மக்களை மேலும் பின்னிலைக்குத் தள்ளும் என்பதால் படத்தைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியா முழுக்க வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இந்தப் படம் தொடர்பான விளம்பரங்களை உத்திரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் தடை கோரப்பட்டுள்ளது.