"அருந்ததியர் உள் ஒதுக்கீடை உயர்த்த வேண்டும்'

8 Aug) ஆம்பூர், ஆக. 7: அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத உள்ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டுமென அருந்ததி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வலசை இரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவர் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். தாட்கோ கடன்கள் அருந்ததி மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அருந்ததி மக்கள் வசிப்பிடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அவர். முன்னதாக ஆம்பூர் ரோட்டரி ஹாலில் நடந்த அருந்ததி மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, துணைச் செயலர் சண்முகம், பொருளாளர் ராஜவேல், மகளிர் அணித் தலைவி இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.