முக்கியத் தொழில்


இவர்களின் முக்கியத் தொழிலான துப்புரவுப்பணியாளர்கள் காரணமாக, தலித்துக்களின் உடைகளைக் கழுவும் சாதியினரோடு சேர்த்து மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் அடக்கப்படுகின்றனர். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் 



பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் சக்கிலியருக்கு இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலாபாங்கி போன்றவை உதாரணங்களாகும்.



இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப்பணியாளர்கள் அகற்றல் என்றபடியால் தலித்துகள் உட்பட ஏனைய சாதியினர் இவர்களுடன் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவர்கள் மனித கழிவகற்றும் தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடு்த்தப்படுகின்றனர். இவர்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிப்பது வழக்கமாகும். அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் 
தருவது, 



போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்


.நகர சுத்தி தொழிலாளர்கள்
சக்கிலியர்அருந்ததியர்கள் இவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கிய 3 சதவீகித உள் ஒதுக்கிட்டின் படி அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும் இடம் கிடைக்கப்பட்டாலும்,தனியார் கல்வி நிறுவனங்களில் இவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க முடியா சூழ்நிலையில் உள்ளனர். ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்தாலும் அவர்களின் குடும்பம் கடன் சுமையில் சிக்கி மிகவும் அவதிபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தயக்கம் கட்டி மறுக்க படுகின்றனர். இதன் காரமாக பட்ட படிப்பு முடித்தவர்கள் கூட தொழிலாளிகளாகவே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.