தச்சூர் தலித் இராசேந்திரன் படுகொலையை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிறித்துவ சமூக நீதி பேரவை ஆர்ப்பாட்டம்

 எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணைப்படி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தச்சூர் தலித் இராசேந்திரன்படுகொலையை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிறித்துவ சமூக நீதி பேரவை சார்பில் மதுராந்தகம் தேரடி தெருவில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கடந்த 22-ந்தேதி இது தொடர்பாக இரு சமூகத்தினரிடையேயும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் தலித் கிறிஸ்தவர்களை தேவாலயத்துக்குள் பூட்டி சிறை வைத்தனர். தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. அண்ணாதுரை, தாசில்தார் சக்கரவர்த்தி ஆகியோர் சென்று சமரசம் செய்து மீட்டனர்.

பொது கல்லறை தோட்டத்தில் அனைவரது உடலையும் அடக்கம் செய்யலாம் என்று உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி அதே ஊரைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஜான் என்பவரது அண்ணன் வேளாங்கன்னி நோய்வாய்பட்டு இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் தச்சூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பின்பு வேளாங்கன்னியின் உடலை கிராமத்தில் உள்ள பொது கல்லறையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவரான ராஜேந்திரன் (38) என்பவர் குழி வெட்டும் பணியில் ஈடுபட்டார். உடல் அடக்கம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.   அன்று இரவு முதல் ராஜேந்திரனை காணவில்லை. இதுபற்றி லூசியா செய்யூர் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் ராஜேந்திரன் உடல் தச்சூர் ஏரியில் பிணமாக மிதந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிண பரிசோதனை நடந்தது.   ராஜேந்திரன் உடலை வாங்க அவரது உறவினர்களும், தலித் கிறிஸ்தவர்களும் மறுத்துவிட்டனர்.

மருத்துவமனை பிணவறை அருகிலேயே மறியல் போராட்டம் நடத்தினார்கள். காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் பேசியும் மறியலை கைவிடவில்லை. விடிய விடிய மறியல் நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று உறவினர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தலித் கிறிஸ்தவ மக்கள் பொது சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்ய உரிமை கோரி நீண்ட நாள் போராடி வந்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை பல ஆண்டுகள் நடந்தது. அதன் அடிப்படையில் பொது கல்லறையில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் பிணத்தை புதைக்க உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் தலித் கிறிஸ்தவர் உடலை பொது கல்லறையில் அடக்கம் செய்தனர். இதற்கு முன் முயற்சி ராஜேந்திரன் மேற்கொண்டார் என கருதி அதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு குழுவினர் ராஜேந்திரனை கடத்தி சென்று படுகொலை செய்திருக்கிறது.

படுகொலை செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். என எழுச்சித்தமிழர் கூறினார்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்க காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன், கிட்டு, தென்னவன், பூவிழி, மேனகா, எழிலரசு, ஊடகமைய மாவட்ட செயலாளர் மதி.ஆதவன் உளிட்ட ஆயிரத்திற்கும் மேலான விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.