நோக்கம் :
- .ஒடுக்கப்பட்ட அருந்ததிய மாணவர்களுக்கு கல்வி ,உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் .
- மாணவர்களை சமூக ,கல்வி ,பொருளாதார மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக் பொறுப்புள்ளவர்களாக உருவாக்குதல் .
நமது பணிகள் :
- .முதல் தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் .
- .பள்ளி கல்வியில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வழிகாட்டுதல் .
- .சமூகத்தில் பாரம்பரிய தொழில்கள் என இமமக்களின் மீது திணிக்கப்பட்ட துப்புரவு தொழில் செய்யும் தொழிலாளிகளின் குழந்தைகளின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை மீட்டு எடுத்தல் .
- முதல் தலைமுறையாக கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் மாணவர்களை ராகிங் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் .தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடத்துதல் .
- பட்டதாரி மாணவர்களுக்கு உயர் கல்வி ,ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்பு பற்றிய பயிற்சி பட்டறைகள் நடத்துதல் .
- .பட்டதாரி மாணவர்களுக்கு அரசு ,பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனகளில் வேலை வாய்ப்பு பெற வழிகாட்டுதல் .
- சமூகதில் திறமை உள்ள மாணவர்களை கண்டெடுத்து நீதித்துறை மற்றும் ஆட்சித்துறை பணிகளுக்கு வழிகாட்டுதல் .
- சாதீய வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட குடும்பக்களின் குழந்தைகள் ,சமூக விடுதலைக்காக போராடி மாண்ட கலபோராளிகளின் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல் .
- திரைப்படம் ,போதை பழக்கம் மற்றும் கலாசார சீரழிவிலிருந்து மாணவர்களை காப்பாற்றுதல் .
- மாணவர்கள் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்துதல் .
(இம்மக்களின் கல்வி மீது ஆர்வமுள்ள தோழர்களை வரவேற்கிறோம் )
தோழமையுடன்
எல் .சி. குருசாமி கல்வி மையம்
தொடர்ப்புக்கு :
5 /8 , காந்தி நகர் வீதி ,
உப்பிலிபாளையம் ,
கோவை -15 .
9843962567 ,9894525254 )