புதுக்கோட்டை: அருந்தியினர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என கூட்ட்தத்திகூஅபுதுக்கோட்டையில் அருந்ததியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலு, பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட இணை செயலாளர் அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்ட பேரவையில் 201112ம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றதில் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களின் முன்னேற்றத்திற்கு ஏதுவாக அரசு ஏதும் அறிவிக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை சிறப்பு கவனத்தோடு நடத்த வேண்டும்.
அருந்ததியர் குழந்தைகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஊக்கப்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். அருந்ததியர் தொழில் தொடங்க ஆதிதிராவிடர் அலுவலகம் (தாட்கோ) மூலம் நிபந்தனையின்றி ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் தர வேண்டும். அருந்ததிய மக்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு 3 சதவீதத்தை ஆதரித்து தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.