சாதீயமும் தமிழ்த் தேசியமும் - தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாடுகிறார்கள்


விழுதுகள் விசேட நிகழ்ச்சி - 08.10.2011 சனிக்கிழமை - பிரித்தானிய நேரம் மாலை 05.00 மணி முதல் 08.30 வரை இலங்கை-இந்திய நேரம் இரவு 09.30 முதல் 01.00 வரை
சாதீயமும் தமிழ்த் தேசியமும் - தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாடுகிறார்கள்
 விழுதுகள் விசேட நிகழ்ச்சி
08.10.2011 சனிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 05.00 மணி முதல் 08.30 வரை இலங்கை-இந்திய நேரம் இரவு 09.30 முதல் 01.00 வரை

சாதீயமும் தமிழ்த் தேசியமும் - தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாடுகிறார்கள்

தமிழகத்தின் மூன்று தலித் பேரியக்கங்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபுதிய தமிழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை என்பன ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும், ஈழமக்களின் பால் பரிவுள்ள இயக்கங்கள். ஈழத்தையும்; தமிழகத்தையும் சேர்ந்த மிகச் சிறுபான்மை அரசியல்வாதிகள் சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இருக்கும் உறவையும் முரணையும் இலங்கை அரசுக்கு ஆதரவான தமது கொள்கை நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். இச்சூழலில், தலித் இயக்கங்களின் முப்பெரும் தலைவர்கள் சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான உறவையும் முரணையும் தமது அனுபவங்களில் இருந்து எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதனை இந்த வார விழுதுகள் நிகழ்ச்சியினூடே நம்முடன் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்

கலந்து கொள்வோர் :

தொல். திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

டாக்டர். பா.கிருஷ்ணசாமி
தலைவர்
புதிய தமிழகம் கட்சி

அதியமான்
தலைவர்
ஆதித் தமிழர் பேரவை

குளோபல் தமிழ் வானொலி நேயர்களை உரையாடலில் பங்கு பெற வருமாறு அழைக்கிறோம்.

நிகழ்ச்சித் தயாரிப்பு
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்