முசாபர்நகர் : உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தலித் வாலிபரை காதலித்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவரது மகள் குலிஸ்தா. இப்பகுதியை சேர்ந்த தலீத் வாலிபர் சோட்டாவை காதலித்து வந்தார். கடந்த வாரம் 22ம்தேதி இருவரும் ஹரித்துவார் சென்றனர். நேற்று முன்தினம் வீடு திரும்பிய குலிஸ்தாவை, அப்துல் சத்தார் கழுத்தை நெரித்து கொன்றார்.
நகராட்சி அலுவலகம் அருகே கிடந்த குலிஸ்தாவை உடலை போலீசார் கைப்பற்றினர். குடும்ப கவுரவத்தை குலைத்ததற்காக மகளை கொன்றதாக அப்துல் சத்தார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.