வெள்ளக்கோவில், செப். 23: வெள்ளக்கோவில், உப்புப்பாளையத்தில் தலித் விடுதலை இயக்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
÷இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் கே.முருகேசன், ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தனர்.
÷அருந்ததியர் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.