தலித் தலைவர் இம்மானுவேல் பிறந்த தினம்-நினைவிடத்தில் 5000 பேர் அஞ்சலி



 

அக்.10-
தலித் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் 5000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம், செப்டம்பர்11ம் தேதி நடந்தது. அப்போது பெரும் கலவரம் மூண்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், நேற்று இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றைய தினத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

கலவரத்தில் பலியானர்வகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களும், கிராமமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அமைதி ஊர்வலம் 5 முனைபகுதியில் இருந்து தொடங்கி இமானுவேல் சேகரன் நினைவிடத்தை அடைந்தது.

நினைவிடத்தில் 5000க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.