ஒரு அப்பாவி அருந்ததியர் சமூகத்து பெண்ணின் மீது கொலைவெறி தாக்குதல்

நெல்லை மாவட்டம், தாழையூத்து பஞ்சாயத்து தலைவராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திருமதி. கிருஷ்ணவேணி மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆதிக்க சாதிவெறியர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. பதினேழு இடங்களில் வெட்டுபட்டு, இன்றுவரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் அந்தப்பெண்மணி. காவல்துறை இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை. நெல்லை மாவட்டம் வீரத்திற்கு பெயர்போன மண் என்று சொல்வார்கள். ஒரு அப்பாவி அருந்ததியர் சமூகத்து பெண்ணின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த கோழைகளை, இந்த அரசு கைது செய்யததற்கு "கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம்" வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.