அருந்ததிய மகளுக்கு நாகர்கோவில் நகராட்சியில் முதல் முறையாக நகராட்சி உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் இடத்தை அளித்த ஆ.இ.ஆ.தி.மு.க.
நாகர்கோவில் நகராட்சியில் 4 வது வார்டுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கான வார்டாக நாகர்கோவில் நகராட்சி அறிவித்துள்ளது. இதில் அருந்ததிய மகள் கலையரசி கண்ணன் அவர்கள் கிருஷ்ணன்கோவில் பகுதி அருந்ததிய ஊர் பொதுமக்கள் சார்பாக வேட்பாளராக நிருத்தப்பட்டுளார் இதை அறிந்த ஆ.இ.ஆ.தி.மு.க வினர் கலையரசி கண்ணனை தங்களுடைய வேட்பாளராக போட்டியிடுமாறு அருந்ததிய சமுதாய நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதின் பேரில் கலையரசி கண்ணன் ஆ.இ.ஆ.தி.மு.க சார்பில் நகரமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் நாகர்கோவில் நகர்மன்றதிற்குள் செல்லும் முதல் அருந்ததியர் என்ற பெயரை தட்டிச்செல்வார். இவர் நகர்மன்றதிற்குள் சென்றபிறகே நாகர்கோவில் நகர்மன்றதிற்குள் இருக்கும் அருந்ததியர்களுக்கு எதிரான குளறுபடிகள் வெளிப்படும். இவரின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்போம்