சேலம், செப். 28: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, தலித் இயக்கங்கள் சார்பில் சேலத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அருந்ததியர் மக்கள் இயக்க துணைப் பொதுச் செயலாளர் பி.சின்னதுரை, ஸ்பீடோ இயக்க மேயர் வேட்பாளர் பி.தேவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அருந்ததியர் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் ஜெ.பிரதாபன், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு, அரசு வேலை வழங்க வலியுறுத்தப்பட்டது.