சோனியா மருமகனின் ஊழலை அம்பலப் படுத்துவேன் - சுப்பிரமணிய சாமி!


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஊழல்கள் குறித்த ஆதாரங்களைத் தாம் சேகரித்து வருவதாகவும் விரைவில் அவருடைய ஊழல்களை வெளிப் படுத்த உள்ளதாகவும், ராபர்ட் வதேராவின் ஊழல்கள் குறித்து தற்போது எதையும் கூறப் போவதில்லை என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, "ராபர்ட் வதேரா ஊழலை விரைவில் வெளிப் படுத்துவேன். நான் எப்போதெல்லாம் தனி நபர்களின் ஊழல்களை வெளிப் படுத்துகிறேனோ அப்போதெல்லாம் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப் படுகிறது" என்று தெரிவித்தார்.

ராசாவுக்கு எதிரான ஊழலை வெளிப் படுத்திய போது தம்மை தலித் எதிரி என்றும் 2G ஊழல் வழக்கில்  கனிமொழி கைது செய்யப் பட்ட போது தன்னைப் பெண்களுக்கு  எதிரானவன்  என்றும் கூறப் பட்டதாகவும் தம்மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.