தலித் பகுதியை புறக்கணிக்கும் ஊராட்சி நிர்வாகம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!!


தலித் பகுதியை புறக்கணிக்கும் ஊராட்சி நிர்வாகம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!!

திங்கள் 22, ஆகஸ்ட் 2011 12:42:39 PM (IST)


அத்திரமரப்பட்டி கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அப்பகுதி மக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாகர் பேரவை தலைவர் நவராஜ் முன்னிலை வசித்தார். சமூக செயல்பாடுகள் இயக்கம் தமிழ்ச்செல்வன் போராட்டம் குறித்து பேசினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அத்திமரப்பட்டி, கக்கன்ஜி நகரில் உள்ள பஞ்சாயத்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால், குடிநீர் கழிவுநீராக மாறி வருகிறது.  இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தலித் பகுதியான கக்கன்ஜி நகரில், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் (பொறுப்பு) மனு அளித்தனர்.