கொத்தடிமையாக மறுத்த தலித் கொலை


உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் நிர்காஜானி கிராமத் தில் கொத்தடிமையாக வேலை செய்ய மறுத்த தலித் கொலை செய்யப்பட்டு, அவரது சடலத்தை சாலையில் இழுத் துச் சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் இப்போதும் பணக்கார உயர்சாதியைச் சேர்ந்தவர்கள், தலித்துகளைக் கொத்தடிமைகளாக நடத்துவதும், கொத்தடிமைகளாக இருந்து வேலை செய்ய மறுப்பவர் களைக் கொலை செய்வது உட்பட பல் வேறு கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்படுத்துவதும் நடைபெற்றுக் கொண் டுதான் இருக்கின்றன.

முசாபர் நகர் மாவட்டம் நிர்காஜானி கிராமத்தில் கரம்சந்த் (வயது 42) என் பவரை தங்கள் கிராமத்தில் உள்ள பணக்காரர்களின் வயல்களில் வேலை செய்ய மறுத்ததற்காக கொலை செய்து, அவரது சடலத்தை சைக்கிளில் வைத்து ஊர்வலமாகக் கிராமத்திற்குள் எடுத் துச் சென்றுள்ளனர். தங்களுக்கு வேலை செய்ய மறுக்கும் எவராக இருந்தாலும் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மற்ற தலித்துகளை மிரட்டியுள்ளனர்.

பின்னர் பிணத்தைச் சுற்றி நின்று கோரமான முறையில் நடனமாடி விட்டு, பிணத்தை வாய்க்காலில் எறிந்து விட் டுச் சென்றுவிட்டனர்.

தன் தந்தையைக் காப்பாற்ற வந்த கரம்சந்தின் மகன் மோனு என்பவரை யும் கிராமத்தினர் தாக்கியுள்ளனர். மோனு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம யத்தில் காவல்துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் போபா காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, கொலை செய்தவர்கள் கிராமத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் ‘பேகார்’ அல்லது ‘பேகாரி’ என்னும் கொத்தடிமை முறை மத்தியகாலக் கட்டத்திலிருந்து அம லில் இருந்து வந்தது. இதன்படி தலித் துகள் கிராம உயர்சாதியினருக்கு கட்டா யமாக உடல் உழைப்பை இலவசமாக நல்கிட வேண்டும். அவர்களில் ஒரு சில பேருக்கு பெயரளவில் ஏதோ கூலி வழங்கப்படும். தலித்துகள் எவரேனும் தங்களுக்கு என்று சொந்தமாக நிலம் வைத்திருந்து அதனைப் பார்த்துப் பரா மரிக்கவேண்டியிருந்தாலும், அத னைப் புறக்கணித்துவிட்டு உயர்சாதி யினரின் நிலங்களைத்தான் அவர்கள் பார்த்து, பராமரித்திட வேண்டும்.

இந்தக் கொடுமையான சட்டத்தை 1976ஆம் ஆண்டு மத்திய அரசு ஒழித்து விட்டது. ஆயினும் நடைமுறையில் இன்னும் பல பகுதிகளில் இது நடந்து வருகிறது.

சம்பவத்தன்று கரம்சந்த்தும் அவ ரது மகன் மோனுவும் தங்களுடைய வய லில் வேலை செய்து கொண்டிருந்தி ருக்கிறார்கள். அப்போது அக்கிராமத் தைச் சேர்ந்த உயர்சாதி நிலப்பிரபுக் களான அம்ரேஷ், தனபால் மற்றும் ரமேஷ் சிங் என்பவர்கள் மேலும் பத்து பேருடன் அவ்விடத்திற்கு வந்துள்ள னர். கரம்சந்திடம் வேலையை நிறுத்தி விட்டு தங்கள் வயலுக்கு வந்து கோதுமை அறுவடையைச் செய்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். கரம் சந்த் அவர் கள் காலில் விழுந்து கும்பிட்டு, தன் னால் வர இயலாது என்று மறுத்திருக் கிறார். உடனே அவர்கள், அவரைத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் தாக்கு தல்களிலிருந்து தப்புவதற்காக கரம் சந்த், அங்கிருந்த கோவிலின் உச்சிக்கு ஏறிச் சென்றிருக்கிறார். அப்போது அம் ரேஷ், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். சம்பவ இடத்திலேயே கரம்சந்த் உயிர் பிரிந்துவிட்டது.

பின்னர் அவர்கள் கரம்சந்த் உடலை, சைக்கிளில் வைத்து, கிராமத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். தங்கள் கட்டளையை மீறும் எவராக இருந்தாலும் அவர்கள் இவ்வாறு கொல் லப்படுவார்கள் என்று கூச்சலிட்டுள் ளனர்.

கரம்சந்த் உடலைத் தன்னிடம் ஒப் படைத்துவிடுமாறு அவரது மனைவி ராஜேஷ்குமாரி கேட்டுள்ளார். அதற் கும் அவர்கள் அவரைப்பார்த்து கொக்க ரித்து, பிணத்தைத் தர மறுத்துவிட்ட னர். பின்னர் கரம்சந்த் சடலத்தை ஒரு வாய்க்காலில் எறிந்துவிட்டுச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக ஐவரைக் கைது செய்திருப்பதாகவும், 12 பேர் தலை மறைவாக இருப்பதாகவும் முசாபர்நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பி.சிங் தெரிவித்திருக்கிறார்