தமிழக தலித் கிறித்தவர்களைப் பற்றி தமிழக ஆயர்களுக்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உரை
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 17.11.2003 அன்று தமிழக ஆயர்களைச் சந்தித்த போது பின்வருமாறு கூறினார்.

" நீங்கள் (தமிழக ஆயர்கள்) எல்லாக்காலத்திலும் தலித்துகள் எனப்படுகிற தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவதில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து எக்காரணத்தைக்கொண்டும் தலித்துகளை தனியாகப் பிரித்துவிடக்கூடாது. கிறிஸ்த்தவர்களுக்கு இடையிலான உறவைப் பொறுத்தவரை, சாதி அடிப்படையிலான எத்தகைய முன்சார்பு வெளித்தோற்றமும் கூட உண்மையான மானிட கூட்டொருமைக்கு எதிரான அறிகுறி. ஆக்கபூர்வமான அருள்வாழ்வுக்கு அச்சுறுத்தல். திருச்சபையின் நற்செய்திப் பணிக்கு மிக மோசமான தடைக்கல் ஆகும்."

                                                                                         திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
                                                                                                                    17.11.2003