உங்க வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்??


காலகாலமாக இந்த சமுகத்தின் அழுக்கை சுமக்க வைத்திடவேன்றே ஒரு சமுகத்தை இந்து மதம் கட்டமைத்து வைத்தது. காத்திருந்தும் செவிடர்களாய், கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் சமூகத்தின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்ட அருந்ததியர்கள் உரிமை கேட்டு எழுந்திட துவங்கினர். அவர்கள் எழும் போதுதான் தெரிந்தது அவரகள் சாதி இந்துக்களுக்கு மட்டுமல தலித்தில் உள்ள சாதி ஆதிக்கவாதிகளுக்கும் எரிச்சலை கொடுத்தார்கள் என.
வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறோம் – உங்க
வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்
என வரலாற்றை கேள்வி கேட்டு, இத்துனை நாள் அடங்கிக்கிடந்தவன் உள் ஒதுக்கிட்டு கேட்டது, தலித் அண்ணன்களுக்கு கோபத்தை கொடுத்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய செங்கொடி இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுங்கிக்கிடந்த அருந்ததியர்களை விதியில் இறங்கி போராட வைத்தது மட்டுமல்ல அவர்கள் உரிமையை பெற்றுத்தந்தது.
அப்படி போராட்ட காலங்களில் பல இலக்கியங்கள் எழுந்தது. அப்போது தெருக்களில் அருந்ததிய மக்கள் முழுங்கிய ஒரு பாடல் இது.

நாத்தமுன்னா கை பிடிக்குது மூக்க – அந்த
நரகலுல கெடக்குது எங்க வாழ்க்க
போனவுக வந்தவுக பார்க்கவேயில்ல – எங்க
பொருமல்கள ஒரு காதும் கேட்கவேயில்ல
தோட்டிகளை மனுசனோட சேர்கவேயில்ல – எங்க
தோட்டத்திலே ஒரு பூவும் பூக்கவேயில்ல.
(நாத்தமுன்னா)

எதுகலிக்கும் குமட்டல்களை செறிச்சிருக்கிறோம் – நீங்க
ஏசும் போது கண்ணீரோடு சிரித்து நிற்கிறோம்
வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறோம் – உங்க
வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்
(நாத்தமுன்னா)

பொழுதெல்லாம் உங்களுக்கு புலர்ந்திருக்குது – எங்க
புன்னகையை புடுங்கித்தானே பூசிரிக்குது
வேதனையின் தீ உள்ளே வளர்ந்திருக்குது – எங்க
விடியலுக்கு சூரியன்கள் அதிலிருக்குது
(நாத்தமுன்னா)

தேசத்தின் கொடிகளெல்லாம் தள்ளி நின்றது – எம்மை
செங்கொடியின் கைகள் தானே அள்ளிக் கொண்டது