தலித் பெண் மீது பாலியல் வன்முறை


கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்குட்பட்ட வீரப்ப கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, கணவனை இழந்த ஒரு தலித் பெண்ணை,  5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மூன்று நாட்கள் நினைவிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், அதற்குப்பிறகு கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

புகார் கொடுத்து இரு வாரங்கள் ஆனபிறகும், காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை.  யாரையும் விசாரிக்கக்கூட இல்லை.  ஆனால், FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேற்படி ஐவர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால், காவல்துறை தயங்குவதாக சொல்லப்படுகிறது.

மேலும், FIR பதிவுசெய்யப்பட்ட பிறகு, "இது ஒரு பொய்யான புகார்" என்று கிணத்துக்கடவு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவிகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.  

காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக விசாரித்து, குற்றவாளிகளையும், குற்றவாளிகளைக் காப்பாற்றுபவர்களையும் கைதுசெய்யவேண்டும். இது அருந்ததியனின் கோரிக்கை..........