சாப்பிட்ட இலையிலும் சாதீயம்…


சாப்பிட்டு விட்டு கீழே  போடும் இலையிலும் சாதீயம் போற்றும் என் இனமான தாய் திரு நாடு, என் தமிழ்நாடு..
சென்ற மாதம் அதாவது   ஆகஸ்ட்டு  23ம தேதி அன்று எனது நண்பர் ராஜேஷ்வேல்  திருமணத்துக்கு கோவில்பட்டி க்கு எனது நண்பர் சசிக்குமார் மற்றும் கண்ணன் ,குமரன்,ப்ரேம்,ராஜேஷ்,தமிழ்,சேர்த்து ஏழுபேராக சென்று இருந்தோம் .
மணமகன் எங்களை இரண்டு நாள் முன்பே வரவேண்டும் என்று அன்புகட்டளை இட்டதால் இரு தினங்கள் முன்பே சென்றுவிட்டோம் ,அவருடன் கூடமாட சில வேலைகளை செய்யலாம் என்றால் எல்லாவற்றுக்கும் ஆள் வைத்து இருக்கிறார்,
சரி நாங்கள் ஊரை சுற்றி பார்த்து விட்டு வருகிறோம் என்று நானும் எனது நண்பர் சசிகுமாரும் கடைத்தெருவுக்கு வந்தோம் ,இங்கு இந்த ஊருக்கென்று என்ன சிறப்பானதென்று ஓரு பெரியவரிடம் கேட்டோம் ,எதுவுமே இல்லைங்க என்றார்,
சரி வாங்க சிற்றுண்டியாவது சாப்பிடலாம் என்று எனது நண்பரை கூப்பிட்டு கொண்டு ஓரு ஹோட்டலுக்குள் சென்றேன்.சற்று பழைமையான ஓரு ஹோட்டல் போல இருந்தது ,இருவரும் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல கை கழுவ குழாயடிக்கு சென்றோம்  ,ஓட்டல் உரிமையாளர் தம்பி இலையை எடுங்க என்றார்.நண்பர் திரு திரு வென்று முழிக்கிறார்.ஏனென்றால் அவருக்கு அது புதிது ,ஏன் நான் எடுக்கணும் அதுக்கு ஆள் வைத்துக்கொள்ள மாட்டீர்களா? என்றார்.
அதெல்லாம் இங்கே கிடையாது, நீங்க எந்த ஊர் என்றார் ஓட்டல் உரிமையாள்ர் .நாங்க சென்னை என்றோம் .இங்கே அந்த பழக்கம் இல்லை என்றார்.சரி என்று எடுத்துபோட்டுவிட்டு வந்தோம்.எனது நண்பருக்கு மட்டும் அதே சிந்தனை ,ஏன் அதுக்கு ஓரு வேலையாளை வைத்துக்கொள்ள  மாட்டேன் என்கிறார்கள் என்று.
மறுநாள் வேறொரு ஓட்டலுக்கு  சென்றோம் ,அங்கு உணவறிந்து விட்டு கிளம்புகையில் அதே போல அந்த ஓனரும் சொன்னார்.எடுத்தோம் ,ஆனால் காரணம் கேட்காமல் போவதில்லை என்று ஓரு முடிவோடு அப்வரிடம் இனமாக பேசி கேட்டோம் ,ஏன் ஓரு ஆள் வைத்துக்கொள்ள வேண்டியது தானே ? என்று .  அவரும் ஆரம்பத்தில் மழுப்பினார்.கடைசியில் அந்த உண்மையை போட்டு உடைத்தார்,–
இது தான் உண்மை — இங்கு பள்ள்ன் பறையன் சக்கிலியன் எல்லாம் சாப்பிட வருகிறான் அவன் சாப்பிட்ட இலையை நாம எப்படி எடுக்க முடியும் தம்பி? .இது நம் முன்னோர்களே செய்து வைத்த ஏற்ப்பாடு என்று  தன் வல்லாதிக்கத்தை பெருமைப்பட கூறினார். நாங்களும் அது தானே ,ஆமா அது எப்படி எடுப்பது என்று அவரிடம் உண்மையை தெரிந்த மாத்திரத்தில் வந்து விடாமல் ஏன் அவங்களும் மனிதர்கள் தானே என்று கேட்டால் அது எப்படி தம்பி நாமளும் அவங்களும் ஒன்னாக முடியும் என்கிறார் அந்த முறுக்கு மீசை பெரியவர்
இதை எழுதும்போது நான் ஒன்றை சொல்லியாக வேண்டும் தான் சாப்பிட்ட இழையை எடுப்பது தவறோ இழிவோ இல்லைதான்  . காந்தியே தன் வேலையை தான் தானே செய்துகொண்டார் என்று சொல்பவர்களே ,
தாமிழ்நாட்டில் தென்பகுதி மக்களுக்கு இது பழகிப்போன ஒன்றாக இருப்பதால் அதுக்குள் புதைந்திருந்த உண்மையை அறிய நீங்கள் முற்பட்டு இருக்க மாட்டீர்கள் ,ஆனால் எங்களுக்கு இது புதிது ,அதனால் அதன் ஆதியை அறிய வேண்டியதாயிற்று ,
அறிந்த மாத்த்திரத்தில் இந்த இழிவான நிலையில் இந்த தமிழன் இருந்து கொண்டு தானா  தமிழினம், தமிழன் என்று பெருமைபடவும் ஏனைய பிரச்சினைகளை கையில்கொண்டு  இங்கே எதுவுமே இல்லை தன்னிறைவு பெற்ற சமத்துவம் நிறைந்த நாடு போல காட்டிகொள்கிறான் என்று என்ன தோன்றுகிறது.
மற்ற பிரச்சினைகளை களைய முற்ப்படும் என் இனமான மிக்க தமிழினமே நம் நாட்டிலே நடக்கும் இதுபோன்ற சாதீய வன்கொடுமைகளையும் ஆதிக்க சாதி மனப்போக்கையும் களைய முற்ப்படுங்கள்..
வெறுமனே தமிழினம் ,இனமானம் என்று பேசுவதற்கு முன்  அந்த இனத்துக்குள் இருக்கும் ஊணத்தையும் உற்றுநோக்கி, அகற்றி  தூய்மைபடுத்துங்க…

thanks to Muthukumaran