அருந்ததிய சிறுமியை மலம் அள்ள வைத்த கொடுமை : சாதிவெறியர் அராஜகம்


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிரா மத்தில் அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமை நடத்துவதை தடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித் துள்ளனர்.
கொட்டாவூர் கிராமத் தில் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துறையில் ஈடு பட்டு வரும் இவர்களது நிலங்களை அதே கிரா மத்தில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் மிரட்டி அபக ரித்து வருவதாக இம்மக்கள் புகார் கூறியுள்ளனர்.
திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர், தங்களது நிலம் மற்றும் போக்குவரத்து சாலைப் பகுதியை முள் வேலி போட்டு ஆதிக்க சாதியினர் தடுப்பதாக கூறி னர்.
பல்லாண்டு காலமாக தாங்கள் ஆதிக்க சாதியி னரின் தீண்டாமைக் கொடு மைகளை அனுபவித்து வரு வதாக தெரிவித்த அவர்கள், தேநீர் கடைகளில் சமமாக தேநீர் தர மறுப்பது, தாழ்த் தப்பட்ட பெண்களை பாலி யல் வன்முறைக்கு உள்ளாக் குவது, ஊர்ப் பஞ்சாயத்து என்று கூறி சரமாரியாக தாக்குதல் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் தாங்கள் தினந்தோறும் வேதனை அனுபவித்து வரு வதாக அருந்ததிய மக்கள் தெரிவித்தனர்.
இக்கொடுமைகளின் உச்சமாக, சமீபத்தில் அருந் ததியர் காலனிக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் மலம் கழிக்கச் சென்ற 7 வயது சிறுமியை மிரட்டி, அவளது கையாலேயே மலத்தை அள்ள வைத்த கொடுமையையும் சாதி வெறியர்கள் அரங்கேற்றி யதாக அம்மக்கள் கண்ணீ ருடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பல புகார்களை காவல் நிலை யத்தில் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் தெரி வித்தனர். (ந.நி)

thanks to inioru.com