மனதைப் புண்படுத்தும் ஒரு சுவரொட்டி


நாட்டில் சமாதானம்நல்லிணக்கம்ஒற்றுமைஅபிவிருத்தி ஏற்படுவதற்காக அரசு துரிதமாகச் செயல்படும் வேளையில் அவற்றுக்குக்
குந்தகம் விளை விக்கும் செயல்கள் எங்கேனும் தெரிந்தோதெரியாமலோ நடந்தால் அவற் றைச் சுட்டிக் காட்டிகளைய முற்படுவது தேசாபிமான முள்ள பிரஜைகளின் கடமையாகும்.
கம்பஹா மாவட்டத்தி லுள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் "பொதுமக்கள் அலகு" என்ற அறைக்குள் நுழையும் போது அநகாரிக தர்மபாலவின் எச்சரிக் கைகள்’ என்ற சுவரொட்டி யைக் காணலாம். அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் மாட்டிறைச்சி புசிக்காதீர்மாட்டைக் கொலை செய்யாதீர்மாட்டிறைச்சி புசிப்பவன் சக்கிலியன்’ என்ற கூற்றும் ஒன்றாகும். இதில் இறுதியாகவுள்ள வசனம் மாட்டிறைச்சி புசிக்கும் இந்நாட்டு பிரஜைகளில் கணிசமான தொகை யினரின் மனதைப் புண் படுத்துவதாகியுள்ளது.
மக்கள் பாதுகாப்புசமாதானம்நீதி மற்றும் பல தேவைகளை நாடிச் செல்லும் ஒரு பொது இடத்தில் இத்தகைய சுவரொட்டிகளைக் காட்சிப் படுத்துவதுதான் வேதனையைத் தருகின்றது. சம்பந்தப்பட்டோரின் மேலான கவனத்திற்கு இதனைத் தாழ்மையுடன் கொண்டு வருகிறேன்.