ராமேஸ்வரத்தில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க அருந்ததியினர் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் அருந்ததியினர் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் அம்பேத்கர் நகர், ராமநாதசுவாமி நகர், பொன்நகர், எம்கே நகர், சத்யாநகர், எம்ஜிஆர் நகர், ஒண்டிவீரன்நகர், பெரியார்நகர், இஎம்எஸ் நகர் ஆகிய பகுதிகளில் அருந்ததியர் இன மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனுக்கொடுத்தம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். அருந்ததியர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதராமல் புறக்கணிக்கும் நகராட்சி நிர்வாகத்தின் மீது பொதுவிசாரணை நடத்த அரசு உத்தரவிடவேண்டும் என அருந்ததியர் உறவின்முறை சங்க நகர் தலைவர் பூமிநாதன், செலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகராட்சி முன்பு போராட்டம் நடத்தவும், வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 


thanks to dinakaran