ஊருக்கும் உலகத்துக்கும் வாந்தியும் பேதியும் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ஜூலியன் அசாங்கே ஒரு பைத்தியக்காரன், இந்த பைத்தியக்காரனை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று இந்தியாவின் உ.பி.மாநில முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டார். அவரின் கட்சி செய்தி தொடர்பாளரும் கடும் கோபம் கொண்டு பேட்டி கொடுத்தார். யார் இந்த ஜூலியன் அசாங்கே என்றார்கள். விக்கிலீக்ஸ் கேபிள் மூலமாக செய்தி வெளியானது. கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
23 - ம் தேதி செல்வி மாயாவதி அவர்கள் தனது காலுக்கு செருப்பு வாங்குவதற்கு லக்னோ வில் இருந்து மும்பைக்கு ஒரு ஜெட் விமானத்தை அனுப்பி, பார்த்து நல்ல செருப்பாக வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அந்த ஜெட் விமானத்தை அனுப்பி உள்ளார் என்று.
இதேபோல கடந்த நாட்களில் எம்.கே.நாராயணன் அவர்கள் பற்றியும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. சூது வாது தெரிந்த காரணத்தால் எம்.கே.நாராயணன் அவர்கள் அப்படியெல்லாம் கிடையாது என்றும், இன்னும் கூட 'ஹேட்லி' யை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது என்றார். நம்ம அசாங்கே என்ன சொன்னார் என்றால், அதாவது அமெரிக்க தூதர் காங்கிரஸ் அரசு கூடி கும்மியடிக்கும் விசயங்களை, தனது ஹெட் குவட்டேர்ஸ் க்கு செய்தி அனுப்புவார்கள். இவ்வாறாக அணைத்து நாட்டின் அரசியல்வாதிகள், மந்திரிகள். அதிபர்கள் அடிக்கும் கூத்துக்களை எல்லாம் அப்டேட் செய்து விடுவார்கள். உலக போலீஸ்காரரன் என்றால் அப்படித்தான். இல்லையென்றால், அமெரிக்காவின் டவுசரையும் சட்டையையும் கடாபி முதற் கொண்டு கழட்டிக் கொண்டு ஓடிப்போய் விடுவார்கள்.
அதாவது இந்த ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்காத பத்திரிக்கைகள் கிடையாது மீடியாக்கள் கிடையாது, வாரம் ஒரு 'முறை' வைத்து ஒப்பாரி வைத்தார்கள், மக்கள் எல்லோரும் அடப்போங்கப்பா...! உங்க ஹெட்லியாவது புடலங்காயாவது..! என்று சொல்ல ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் விட்டு விட்டார்கள். அமெரிக்க தூதுவரிடம் நாங்க கேட்பதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இளிச்சவாய் மக்களுக்காக நாங்க அப்படி கேட்பது மாதிரி கேட்போம், இதையெல்லாம் நீங்க பெரிதாக எடுத்துக் கொள்ளைக் கூடாது என்று, கைப்பிள்ளை ரேஞ்சில் உதார் விடுத்துள்ளார்கள். இந்த விசயத்தை போட்டு உடைத்து விட்டார் நம்ம அசாங்கே அவர்கள்.
பெரும் சந்தேகப் பேர்வழி தான் இந்த செல்வி மாயாவதி அம்மையார். எங்கே நாம் சாப்பிடும் சோற்றில் விஷம் வைத்து கொன்று விட்டால் என்ன செய்வது..? என்று விசத்தை கண்டு பிடிக்க ஒரு இரன்டு பேரும், சமையல் ஒருவர் மாற்றி ஒருவர் சமைக்க ஒரு பத்துப் பதினைந்து பேரும் என்று, அல்லி ராஜ்ஜியம் என்று சொல்வார்களே, அந்த ரேஞ்சுக்கு உ.பி. மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார். அரசு செலவில் தனது சிலையை கட்சியின் மறைந்த தலைவர் கன்ஷிராம் அவர்களுடன் இருப்பது மாதிரி, ஒரு நூறு இடங்களில் நிறுவ உத்திரவிட்டார். சில பல இடங்களில் நிறுவி விட்டார்கள். இவர்கள் இருவர் சிலைகளையும்.
நமது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ அம்மையார் எவ்வளவோ தேவலாம். அவர் என்ன எம்.ஜி.ஆர்.- ம் நானும் இருப்பது மாதிரி சிலை வையுங்கள் ஊரெல்லாம் என்றா சொன்னார்..? இந்திய அரசியலில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மாயாவதி ஒரு முன்னுதாரணம். தனது பிறந்த நாளுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போடுமாறு கூறியவர்தான் இந்த உ.பி.முதல்வர் மாயாவதி அவர்கள். " தலித்துகளின் விடுதலையை தலித்துக்களே, அவர்கள் மட்டுமே முன் எடுக்க முடியும் " என்ற கூற்றுக்கள் தொன்னூறுகளில் தலை விரித்து ஆடியது. இன்றும் கூட இந்தக் கருத்து அப்படியே தான் இருக்கிறது. இவர்கள் மொழியையும் விட்டு விடுவார்கள், மண்ணையையும் விட்டு விடுவார்கள், இறுதியில் பார்ப்பனிய மலத்தை தூக்கிச் சுமக்க மட்டுமே தலித்துகளை பயன்படுத்தி விட்டு, பார்ப்பனியத்தின் காலடியில் குடி புகுந்து விடுவார்கள்.
இந்தியாவில் தலித்துகளின் விடுதலை, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு அப்பால் தான் உள்ளது. அரசியல் சாசன சட்டத்தில் உள்ளது என்று சொல்பவர்கள் அனைவரும் மேற்சொன்ன மலம் சுமக்கும் வேலைக்கு ஆள் எடுகிறார்கள் என்று அர்த்தம். என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். மற்றபடி இந்த விசயங்களை தாண்டி எல்லாம், மாயாவதியின் ஷுவை வை துடைத்ததெல்லாம் சத்தியராஜின் பட்டாப்பட்டி டவுசரை காயப்போடும் போட்டி போன்றதே...!
மாயாண்டிக்கருப்பு