பண்ருட்டி ராமச்சந்திரனின் பதில் தலித் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளது : திருமாவளவன்


பரமக்குடி கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஜான்பாண்டியன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது தான் தூண்டு கோலாக அமைந்தது.  பரமக்குடியில் நடந்த இந்த  துப்பாக்கி சூட்டை கண்டித்து, 16-ந் தேதி சென்னையிலும், 20-ந் தேதி மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று கூறினார்.


 அவர் மேலும்,  ‘’துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு வருக்கு வேலை கொடுக்க வேண்டும். காவல் துறை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் பதில்,   தலித் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. நீதி விசாரணை தேவையில்லை என்று அவர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.’’ என்று கூறினார்.