எனது சொந்தங்களே
தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை கேட்க அதிகமான இயக்கங்கள் உள்ளது, இருந்தும் சில சமயம் இயக்கம் சாராதவர்கள் அந்த கொடுமையை கண்டிகிரார்கள். அது மட்டும் அல்லாமல் சி பி எம் போன்ற அரசியல் கட்சிகள் துணையாக உள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் பெரியார் திராவிட கழகம் உள்ளது.
ஆனால், புதுசெரில் உள்ள அருந்ததியர்களை பற்றி பேச எவரும் அங்கு இருபதாக தெரியவில்லை. புதுச்சேரியில் உள்ள அருந்ததியர்கள் பரவலாக அணைத்து ஒருகளிலும் உள்ளார்கள். அனால் இவர்களின் சதவிகிதம் மிக குறைவு. ஆகவே அங்கு பறையர்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஒரு இடமான போரையூரில் அருந்ததியர்களை, பிரியர்கள் கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை.
விளிநூர் அருகில் உள்ள போரையூரில் அருந்ததியர்கள் சுமார் பத்து குடும்பங்கள் உள்ளது. இந்த ஊரில் அதிகமாக உள்ள தலித் சமுதாயம் ஆதி திராவிடர் என்கிற பறையர்கள். ஆகவே இந்த பறையர்கள் அருந்ததியர்களை கோவிலுக்குள் விடுவது இல்லை.
வருகிற 24 ஆம் தேதி சி. பி .எம். அவர்கள் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடுத்துகிறார்கள் புதுச்சேரியில். அந்த நாளில், இவர்கள் இந்த அருந்ததியர் மக்களுக்கு நடக்கும் தீண்டாமையை, கண்டிப்பார்கள? அருந்ததியர் இயக்கங்கள் இதை கையில் எடுக்குமா? என்று காத்துகொண்டு இருகிறார்கள் அந்த மக்கள். (தகவல்: விஜயகுமார், புதுச்சேரி)