வணக்கம். இன்றைய தினமணி நடுபக்க கட்டுரையை படிக்க கிழே கிளிக் செய்யவும். மற்றவர்களுக்கும் அனுப்பவும். கட்டுரையில் எழுப்பப்பட்டவை குறித்த பொதுக்கருத்தை தமிழகத்தில் உருவாக நாம் முயற்சிப்போம். திருவினை ஆகட்டும்.
நன்றி
அ.நாராயணன்
http://dinamani.com/edition/
கட்டுரைகள்
உடனடித் தேவை - நிர்வாகச் சீர்திருத்தங்கள்
First Published : 15 Sep 2011 01:22:54 AM IST
அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டத்துக்குக் கிடைத்த பேராதரவுக்குக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. உயர்மட்ட ஊழல்கள் படித்தவர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், கீழ்மட்ட அரசுத்துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களும், சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களும் தடைகளும், சாதாரண மக்களை வெறுப்படையச் செய்துள்ளது.ஆக, இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதித்துவ ஜனநாயகக் குடியரசு முறை உண்மையாகவே மக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமென்றால், நமது ஆளுகையில் உடனடியாகச் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
நாட்டில் கரை புரண்டோடும் லஞ்ச ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசுப் பணிகளில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையும், தகவல் தொழில்நுட்ப உதவியும் அவசியமாகிறது.அடுத்தது, அரசு அமைத்துள்ள பல்வேறு கண்காணிக்கும், முறைப்படுத்தும் அமைப்புகள் முழுமையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்.மூன்றாவதாக, முடிவெடுக்கும் அதிகாரம், மக்கள் வரை (அதாவது கிராம சபைகள் வரை) பரவலாக்கப்பட வேண்டும்.இவையெல்லாமும் சாத்தியமாக வேண்டுமென்றால், மேலிருந்து கீழ்வரை எல்லாத் துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆட்சிக்குத் தலைமை வகிப்பவர்கள், நிர்வாகச் சீர்திருத்தம் வேண்டும் என்று தணியாத ஆர்வமும், அதீத முனைப்பும் கொண்டால் மட்டுமே இந்த மாற்றம் ஏற்படும்.
இன்றைய அரசியல்வாதிகள் எல்லோருமே மோசமானவர்கள் என்று மேம்போக்காகப் பேசுபவர்கள், இன்று சில மாநிலங்களிலாவது, தொலைநோக்குப் பார்வையுடன், மக்கள்நலன் சார்ந்த, சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்துவரும் ஆட்சிகளைக் கவனித்தால், தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள்.
அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருந்து போராடிய ஜன லோக்பால் மசோதாவில் மிக விரும்பத்தக்க அம்சம் ஒன்று உண்டென்றால், அது வலுவான மக்கள் சாசனம் என்பதுதான்.ஆனால், ஜன லோக்பால் மசோதாவுக்கு முன்னோடியாக, கடந்த ஆண்டே, மத்தியப் பிரதேச மாநில அரசு, இந்த வலுவான மக்கள் சாசனத்தின் சாராம்சமான, "அரசு சேவை உத்தரவாத உரிமைச்சட்டம்' என்ற புதிய சட்டத்தை முதன்முதலாக இயற்றிப் புரட்சிக்கு வித்திட்டது.இச்சட்டத்தின்படி, எல்லா அரசு அலுவலகங்களும், அவர்களது செயல்படும் நடைமுறைகள், சட்டதிட்டங்கள், அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ரேஷன் அட்டை, ஜாதிச்சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட எல்லாவிதமான அரசு சேவைகளுக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்க வேண்டும். ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் சேவையை அளிக்க வேண்டும். காரணமின்றித் தாமதமானால், குறைந்தபட்ச அபராதமும், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் அபராதமும் விதித்து, அலுவலக ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம்செய்து, பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு அளிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அலுவலர்கள் மட்டுமல்லாது, அமைச்சர்களும், முதலமைச்சரும்கூட, இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச அரசைத் தொடர்ந்து, பிகார், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், கோவா மாநில அரசுகளும் இந்த "அரசு சேவை உத்தரவாத உரிமைச் சட்டத்'தை இயற்றியுள்ளன. கேரள அரசும் இதற்கான மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட "ஊழல் தடுப்புச் சட்டத்'தின்கீழ், இன்றைக்கு அரசு ஊழியர்களை விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்கு மிகக் காலதாமதமாவதால், ஊழல்பேர்வழிகள் தப்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும்கூட, அதிகபட்சமாக ஓராண்டுக்குள் விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருந்தாலோ, அந்த ஊழியரின் சொத்துகளை, தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாள்களிலேயே பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்குவதற்கான மற்றொரு புரட்சிகரமான புதிய மசோதாவை, பிகார் அரசு 2009-ம் ஆண்டு வடிவமைத்தது. "பிகார் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் சட்டம் 2009' என்று பெயரிட்டு, ஓராண்டு போராடி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்தச் சட்டத்திலிருந்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழல்பேர்வழிகளும் தப்பிக்க முடியாது என்பது மற்றொரு சிறப்பு. இந்த சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், நன்றாகச் செயல்படத் தொடங்கி ஊழல் பெருச்சாளிகளின் சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதுடன், அவர்களது பங்களாக்கள், அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
பிகாரைப் பின்பற்றி, சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகளாலும், இதே மசோதா அம்மாநிலச் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், ம.பி., பிகார், ராஜஸ்தான் ஆகிய அரசுகள் வெளிப்படையான பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அடுத்தடுத்துக் கொண்டுவந்து, மக்களை அதிகாரப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளன. மத்தியப் பிரதேச அரசு, சுயாட்சியுடன் செயல்படும் நல்லாட்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த மையம் அளிக்கும் பல ஆலோசனைகளை அமல்படுத்தி வருகிறது.
வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தும் உலகளாவிய அமைப்பான "டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்' இந்த மூன்று மாநில அரசுகளின் முன்மாதிரி நிர்வாக நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது. சொல்லப்போனால், இந்த மாநில அரசுகளுக்குள், சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் ஓர் ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது.அதேபோல, 15-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட "கல்வி உரிமைச் சட்டத்'தை அமல்படுத்தவும், அது தொடர்பான விதிகளை இயற்றவும் தொடங்கியுள்ளன. ம.பி. அரசு, ஆசிரியர்கள் நியமனத்தில், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. கேரள அரசு, அம்மாநில பாடத்திட்டக் குழுவை சுயஅதிகாரம் கொண்ட, அரசியல் குறுக்கீடுகள் இல்லாத சுதந்திர அமைப்பாகச் செயல்பட அனுமதித்து, பள்ளிக் கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
பல மாநில அரசுகள், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்தும், அதன்படி உள்ளாட்சித் தேர்தல்களை முறையாக நடத்தியும், அடிப்படை ஜனநாயகத்துக்கு வலுசேர்த்து வருகின்றன. இது மட்டுமல்லாது, பல மாநில அரசுகள், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மாநில லோக்ஆயுக்த நீதிமன்றங்களை அமைத்துள்ளன. இவையெல்லாம், மக்களை மதிக்கிற, பங்குதாரராகப் பார்க்கிற, ஆரோக்கியமான அணுகுமுறை இந்த மாநிலத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் மத்தியப் பிரதேசம், பிகார் ஆகியவற்றின் முதல்வர்கள், மாநிலங்களின் விடிவெள்ளியாக, காமராஜைப் போன்று எளிமையாக மக்கள் அணுகமுடியும் விதத்திலும், ஆரவாரமின்றியும், தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் ஏற்பட்டு வரும் வெளிப்படைத்தன்மையும், ஊழல் ஒழிப்புச் சட்டங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்களும், தொலைநோக்குப் பார்வையும், மக்களை அதிகாரப்படுத்தும் நடவடிக்கைகளும் நம் மாநிலத்தில் அறவே இல்லை. முந்தைய திமுக அரசும் சரி, இன்றைய அதிமுக அரசும் சரி, மக்களை அதிகாரப்படுத்தும் வகையாக இல்லாமல், நுகர்வோராக, பயனாளியாக, மனு போடுபவராக மட்டுமே வைத்துக்கொள்ள விரும்புகின்றன.
மக்கள் நலத்திட்டங்கள் இரு வகைப்படும், ஒன்று இலவச மதிய உணவு, தரமான இலவசக் கட்டாயக் கல்வி, தரமான இலவச மருத்துவம், மானிய விலையில் தரமான உணவுப்பொருள்கள், ஆதரவற்றோருக்கு உதவித்தொகை போன்ற மேம்படுத்தும் திட்டங்கள். மற்றவை, இலவச வண்ணத்தொலைக்காட்சி, இலவச வேட்டி சேலை, இலவச அரிசி, இலவச மிக்சி, லேப்டாப், இலவச தாலி போன்ற பிற்போக்கு வகையறாக்கள். வாக்கு வங்கியை நிலைநிறுத்த நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களிடம் பல்வேறு இலவச நுகர்வுப் பொருள்களைத் திணித்து, சலுகைகளை அளித்து, அவர்களை வளர்ச்சி அரசியல் ஈடுபாட்டிலிருந்து அன்னியப்படுத்தும் செயல்பாடுகளை ஆள்பவர்கள் துரிதப்படுத்துகிறார்கள். இது தமிழக மக்களின் அரசியல் ஈடுபாட்டை அழித்தொழிக்கும் ஆபத்து கொண்டது.
இரு கழக ஆட்சியிலுமே, சட்டமன்றத்தில் ஆரோக்கிய விவாதங்கள் குறைந்து, எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகக் கருதி தூற்றுவதும், ஆளும் கட்சித்தலைவரை உச்சகட்ட செயற்கைத்தன்மையுடன் வானளாவப் புகழ்ந்து குளிர்விப்பதுமே புளித்துப்போன வாடிக்கையாகிவிட்டது.ஆளும் கட்சி, கூட்டணிக்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின், குறிப்பாக இக்கட்சித் தலைவர்களின் இத்தகைய பிற்போக்கான சந்தர்ப்பவாத அணுகுமுறையானது, தமிழக ஜனநாயகத்தளத்தைப் படிப்படியாக அரித்து வரும் கரையான்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், ஜனநாயக முகமூடி அணிந்துகொண்டு, யதேச்சாதிகாரம்தான் மீண்டும் மீண்டும் தலைதூக்கும். கடந்த ஆட்சி, நமக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில், மக்களுக்குப் பயனளிக்கும் சட்டங்களை இயற்றி அமல்படுத்தும்படியும், மக்களை அதிகாரப்படுத்தும் வகையான, வெளிப்படைத்தன்மையில் ஊறிய நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்படியும், அரசை வலியுறுத்துவது நமது வரலாற்றுக் கடமையாகிறது.

--
To read all the issues of paadam, Pl visit our web www.paadam.in &
blog www.paadam-pm.blogspot.com and leave your comments.
Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai - 602 101.