ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே கச்சூரில் தலித் விவசாய கூலிகள் தொழிற்சங்க தொடக்க விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் புலவர் சத்யசுந்தர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோபால், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செங்கல்வராயன் முன்னிலை வகித்தனர். துணை பொதுச் செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார்.
ஊராட்சி தலைவர் சந்திரய்யா, சங்க பெயர் பலகையை திறந்தார். மாவட்ட நிர்வாகிகள் காளிரத்தினம், சாம்சன், பெலிக் சுகிர்தராஜ் சிறப்புரையாற்றினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்துகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, தலித் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், மனைப்பட்டா, பசுமைத் திட்ட வீடுகள் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் வஜ்ஜிரவேல், துணைத்தலைவர் உமா, ஒன்றிய கவுன்சிலர் லைலா உட்பட பலர் பங்கேற்றனர். செல்வராஜ் நன்றி கூறினார்.