விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நந்தவனப்பட்டியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்ற நிலையே உள்ளது. ஆகவேதான் இந்த படுகொலை நடந்துள்ளது. பசுபதிபாண்டியன் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.