''எங்க கோயில், உள்ளே வராதே!''
விரட்டப்படும் மதுரை அருந்ததியர்கள் 1937ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தி, தாழ்த்தப்பட்டமக்களை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற தகவல் அறிந்ததும், தானும் கோயிலுக்குள் செல்ல மறுத்தார் என்பது வரலாறு. 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் மதுரை மாவட்டக் கிராமங்களில் இன்னமும் இதுபோன்ற நிலை தொடர்கிறது என்பதுதான் வேதனை. மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையில் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது சுந்தரம்குண்டு கிராமம். இங்கு, ஓலைக்கூரையின் கீழ் சூலாயுதம் மட்டுமே இருந்த காளியம்மன் கோயிலை, கோபுரத்துடன் கூடிய ஆலயமாக எடுத்துக் கட்டி இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். இதற்கு தங்களிடம் மட்டும் வரி வசூலிக்க மறுத்ததுடன், கும்பாபிஷேகத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் அருந்ததியர் மக்கள். அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். அருந்ததியர் குடியிருப்பு முகப்பில் போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது. தடையை மீறி யாராவது கோயிலுக்குச் சென்று அதனால் பிரச்னையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் காவல். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மணிவண்ணனிடம் பேசினோம். 'மொத்தமே 300. . .