நாகர்கோவில்: அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வடசேரியில் கைகளில் தீபந்தம் ஏந்தி நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் தினகரன் தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாண்விக்டர்தாஸ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சுரேஷ்ஆனந்த், இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் ஜனார்த்தனன், குமரி மாவட்ட பொதுச்செயலாளர் மரியதாசன், இளைஞரணி செயலாளர் கண்ணன், துணைச்செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ஞானராஜ், செல்வம், ஹரிகரசுதன், ராஜேஷ், மெர்லின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.