இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை முன்னிறுத்தி சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சியின் தலைவர்கள் அந்த சமுதாய இளைஞர்களை உழைக்காமல் வாழ்வதற்கான சில தவறான வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார்கள்.
இதனால், தலித் சமுதாய இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் கூட சில அமைப்பின் தலைவர்கள் அந்த அமைப்பின் இளைஞர்களை தூண்டி விடுவதாக தெரிகிறது.
சில தலைவர்கள் தங்களின் சுகமான வாழ்வுக்கு வசதியாக தலித் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய்க்கொண்டிருக்கும் தலித் சமுதாய இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு, நம்முடைய கட்சியில் உள்ள அந்த சமுதாய இளைஞர்கள் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்றார்.