22-ந்தேதி பெங்களூரில் நடக்கும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படி சாட்சியம் அளிக்க வேண்டும் என போயஸ் கார்டனில் வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக் கிறார் ஜெயலலிதா. இந்தச் சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சிறுதாவூர் சொகுசு பங்களாவில் நில மோசடி நடக்கிறது என ஒரு பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் சொகுசு பங்களா அமைந்துள்ள திருப்போரூர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கடந்த 14-ம் தேதி (திங்கள்) நடைபெற்றது. அந்த மாநாட்டில், சிறுதாவூர் சொகுசு பங்களா வளாகத்திற்குள் ஆக் கிரமிப்பு செய்யப் பட்டுள்ள 31.25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலத்தை மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. சிறுதாவூர் பங்களா, ஏற்கனவே பல புகார்களில் சிக்கியுள்ள சூழலில் இது என்ன புதிய புகார் என திருப்போரூர் பகுதி சி.பி.எம். செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இ.சங்கரிட மும் அங்குள்ள தோழர்களிடமும் கேட்டோம். ""வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் பெரும் பணக்காரர்களால் கட்டப் பட்டுள்ள சொகுசு பங்களாக்கள் பல சட்டத்தை மீறி கட்டப்பட்டவைதான். அந்த பங்களாக்களின் காம்பவுண்டிற்குள் அரசு, ஏழைகளுக்கு என வழங்கிய நிலங்கள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் என பல வகையான நிலங்கள் சிக்கியுள்ளன. அந்த பாணியில் ஜெ.வுக்கு நெருக்கமானவர்களான இளவரசி, சுதாகரன், பத்மா ஆகியோர் பரணி ரிசார்ட்ஸ், சென்னை பீச் ரிசார்ட்ஸ் என்ற பெயரில் வாங்கிக் கட்டியுள்ள சொகுசு பங்களா வளா கத்திலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் இருக் கிறது. அந்த ரிசார்ட் ஸுக்கு சொந்தமாக மொத்தம் 150 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் 70 ஏக்கர் ஹஜ் சர்வீஸ் நடத்தி பொது மக்களை மோசடி செய்த ஒரு இசுலாமிய வணிகரின் பெயரில் இருந்த நிலங்கள். அந்த இசுலாமிய பிரமுகர் "எங்களது நிலத்தை போலியாக பத்திரம் தயாரித்து அபகரித்துக் கொண்டார்' என மக்களிடம் பல புகார்கள் எழுந்த 91-96 கால கட்டத்திலேயே "அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றுதான் ஜெ.வுக்கு நெருக்கமான வர்கள் அந்த நிலத்தை கைப்பற்றிக் கொண்டு பங்களா கட்டினார்கள். அந்த பங்களாவைச் சுற்றி காம்ப வுண்டு அமைக்கும்போது அதற்கு பக்கத்தில் இருந்த பெரியகுளம், ஓடை வாய்க்கால், வழிப்பாதை என அரசுக்கு சொந்தமான நீர்நிலை, மேய்க்கால், புறம்போக்கு நிலங்கள் 31.25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித் தார்கள். அத்துடன் நிற்காமல் அறிஞர் அண்ணா 20 ஏழை தலித் குடும்பங்களுக்கு ஆளுக்கு இரண் டரை ஏக்கர் பத்து சென்ட் என வழங்கிய 53 ஏக்கர் நிலம் பங்களா வின் காம்பவுண்டுக்கு வெளியே இருந்தது. அதையும் ஆக்கிரமித் தார்கள்.
இப்படி மூன்று விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் சொந்தம் யாருக்கு என அவ்வப் போது பிரச்சினைகள் எழும். முதலில் தலித்துகளுக்கு சொந்தமான நிலத்தை 2005-ம் ஆண்டு இளவரசி வகையறாக்கள் பெயருக்கு தியாக ராஜன் என்கிற தாசில்தார் மூலம் பட்டா மாற்றியபோது, பிரச்சினை எழுந்தது. ஆட்சி மாறியவுடன் எங்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று நீதியரசர் சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை கமிஷனை தி.மு.க. அரசு நியமித்தது. அது "ஜெ. வகையறாக்கள் தலித் நிலத்தை ஆக்கிரமித்தது உண்மையே' என தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சுப் ரீம் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் இப்போது அமைந்த ஜெ. அரசு புதுவிதமான நிலமோசடியில் இறங்கியுள்ளது. 10-ந்தேதி வாக்கில் சிறுதாவூர் பங்களாவிற்கு வந்த வருவாய்த்துறையின் உயர் அதிகாரிகள் அந்த பங்களாவிற்குள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளது என கணக்கெடுத்தார்கள். ஏன் இந்த கணக்கெடுப்பு என நாங்கள் விசாரித்தபோது, "தலித் நிலங்களை எப்படி கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது தங்களது பெயரில் பட்டா மாற்றம் செய்தார்களோ அதேபோல் பங்களா இருக்கும் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஜெ. வகையறாக் களிடம் ஒப்படைப்பதற்காகத்தான் இந்த கணக்கெடுப்பு' என வருவாய்த்துறை ஊழியர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
இந்த நிலங்கள் எல்லாம் அரசுக்கு உபயோகப்படாத நிலங்கள் என அரசு முடிவு செய்துவிட்டது. எனவே இவற்றை ஜெ. வகையறாக்கள் வாங்கிக் கொள்ளலாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெளிவாகவே விளக்கினார்கள்.
சிவசுப்பிரமணியன் கமிஷன் விசாரணையின் போதே "எங்களது நிலத்தை எங்களுக்கு தெரியாமல் போலியாக வாங்கி சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டுள்ளது' என ஆவடி யைச் சேர்ந்த ஒரு என்ஜினியர் நீதிபதியிடம் புகார் செய்தார். "நீங்கள் எத்தனை பேர் இப்படி ஏமாந்திருக்கிறீர்களோ அவர்கள் தனியாக சிவில் வழக்கு தொடருங்கள்' என நீதி யரசர் அறிவுறுத்தினார். அதேநேரம் "பங்களாவிற்குள் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை அரசே கையகப் படுத்திக் கொள்ள வேண்டும்' என தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டார். இந்நிலையில், அரசு நிலத்தை அபகரிக்க ஜெ. அரசு செய்யும் முயற்சிகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட உள்ளோம்'' என்றார்கள்.
""சிறுதாவூர் நிலம் தொடர்பாக மட்டுமல்ல காஞ்சி மாவட்டத்தில் ஜெ. வகையறாக்கள் வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள பல நிலங்கள் அதன் உரிமையாளருக்கே தெரியாமல் போலி பத்திர பதிவு மூலம் வாங்கப்பட்டது என பொதுமக்கள் வரிசையாக புகார் கொடுக்க தயாராகி வருகிறார்கள்'' என்கிறார்கள் காஞ்சி மாவட்ட விவசாய தலைவர்கள்.
-பிரகாஷ்
thanks nakkeeran+rangarajan,sri rangapattinam