மேலப்பாளையம் குறிச்சியில் கோவில் விழாவில் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்கும், தேவர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. மேலும் பதட்டமான நிலைமை நிலவி வருகின்றது இதனால் குறிச்சி பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
தலித் மக்கள் தங்கள் கோவில் விழாவிற்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு வாய்க்கால் பாலம் வழியாக வந்தனர். அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் தலித் மக்களுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது. இந்த தகராறில் தனியார் பேருந்து தாக்குதலுக்குள்ளானது. பேருந்து ஓட்டுனர் தேவர் குளத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் கோவமடைந்த ஓட்டுனரின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து தலித் மக்கள் சந்தை முக்கிலும், தேவர்சமுதாய மக்கள் குறிச்சியிலும் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலிசார் பேச்சிவார்த்தை நடத்தினர், பின்னர் இரு தரப்பினரும் களைந்து சென்றனர்.
இருந்த போதிலும் மேலப்பாளையம் குறிச்சியில் இன்னும் பதட்டமான நிலைமை நீடித்து வருகின்றது, போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த இருவர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.