பூதப்பாண்டி: இறச்சகுளம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
டாஸ்மாக் மதுக்கடை முன் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மரியதாசன் தலைமை வகித்தார். இளைஞரணி கிழக்கு மாவட்டச் செயலாளர் கண்ணன், மகளிரணி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தினகரன், ஒருங்கிணைப்பாளர் ஜாண்விக்டர் தாஸ், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் ஜனார்த்தனர், கொள்கை பரப்புச் செயலாளர் சுரேஷ் ஆனந்த், சட்ட ஆலோசகர் ஜானி உள்ளிட்டோர் பேசினர்.