ராசிபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில், மாற்று திறன் கொண்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு, கல்வி உபகரணம் வழங்கும் விழா நடந்தது.கொன்னையார் பஞ்சாயத்து தலைவர் லலிதா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமிர்தீசன் வரவேற்றார். யூனியன் சேர்மன் துரைசாமி, துணைத்தலைவர் நாகராணி, பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன், பி.டி.ஏ., தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு, காதொலி கருவி, சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. தமிழக அரசு, மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில், யூனியன் கவுன்சிலர்கள் முத்து, ஜெயராமன், பஞ்சாயத்து தலைவர்கள் பழனியப்பன், முத்துசாமி, சிவபாக்கியம் தொண்டு நிறுவனத்தலைவர் விஜயக்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரோஜா, பெரியசாமி, மணிமேகலை, கமலா மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அருந்ததியர் பேரவை ஆலோசனை கூட்டம்
நாமக்கல்: தமிழ்நாடு அருந்ததியர் பேரவையின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.நிர்வாகி சுப்ரமணி தலைமை வகித்தார். செல்வராஜ் வரவேற்றார். டாக்டர் இளமதி, நிர்வாகி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அருந்ததியர் இட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோருவதை, தமிழ்நாடு அருந்ததியர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 30ம் தேதி, நாமக்கல் அண்ணாதுரை சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவது என்றும், தொடர்ந்து மாநில தலைநகரில் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டை மூன்று சதவீத்ததில் இருந்து ஆறு சதவீதமாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில், பேரவை நிர்வாகிகள் கந்தசாமி, மாதேஸ், ராஜீ, ராமசாமி, ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்