மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது;அதை தடை செய்வதில் தாமதம்

தோழர்களே ! சென்னை ,பல்லாவரத்தில் செல்வராஜ் ,முன்னா ,கோவையில் அசோக் ,கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகிய தலித் -அருந்ததிய சகோதரர்கள்  சாக்கடை ,கழிவு நீரை அகற்ற சென்ற போது  விஷ வாயு தாக்கி  ,தெரு நாய்களை போன்று  மாண்டு கிடந்த அவலத்தை மனிதநேயம் கொண்ட ,சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் மறந்து விட இயலாது .  
                   மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது;அதை தடை செய்வதில்  தாமதம்   குறித்த உச்ச நீதி மன்றத்தின் கண்டனத்தை அடுத்து   மாண்பு மிகு பிரதமர் ,பொருளாதார   மாமேதை மன்மோகன் சிங்க் இந்த அவலத்தை நீக்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஆறு மாத கெடு விதித்தார் . இக்கேடுவை  தாண்டி மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் , மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதின் சாட்சியாக மீண்டும் ஒரு அருந்ததிய சகோதரர்   சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி இறந்த அவலம் கடந்த சனிகிழமை  கோவையில் நடந்துள்ளது .  ஆதிக்க அரசியலின் துரோகமும் , அதிகார வர்கத்தின் மெத்தனபோக்கும்தான்  இதற்க்கு காரணம் .  மேற்கூறிய , இறந்து போனவர்கள் முப்பது வயதை தாண்டாதவர்கள் ;இந்த சாதீய சமூகத்தின் கழிவுகளை சுமந்து தங்கள் வாழ்வியலை நகர்திசென்றவர்கள் . இச்சாதிய சமூகமும் , அரசாங்கமும் தலித் -அருந்ததிய மக்களை வஞ்சிப்பதன் சாட்சியாக ,நாளிதழில்  வந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது .