தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் மாயாவதி: முலாயம்சிங் குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இன்று உத்திரபிரதேசத்தில் பேசும் போது மாயாவதி தலித் மக்களுக்கு ஆதரவானவர் இல்லை. 2007ம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 17 பின் தங்கிய சமுதாயத்தினரின் எஸ்.சி அந்தஸ்தை ரத்து ஒ.பி.சி பட்டியலில் சேர்த்துள்ளார்.ஆகவே அவர் தலித் மக்களுக்கு எதிரானவர் என்று முலாயம் சிங் கூறினார்.மேலும் தனது சிலை, மற்றும் கட்சியின் சின்னமான யானை சிலையை நிறுவுவதிலுமே அதிக கவனம் செலுத்திவரும் மாயாவதியின் தவறான கொள்கையினால் வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும் முலாயம் குற்றம் சாட்டினார்.