தலித் விரோத போக்கை கண்டித்து வி.சி முற்றுகை

வில்லியனூர் அருகே உள்ள மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற தலித் விரோத போக்கினை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சீனியர் எஸ்பி சந்திரனிடம் மனு அளித்தனர்.
வில்லியனூர் அருகே உள்ள மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கட்கிழமை காலை உருளையன்பேட்டை காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, சீனியர் எஸ்பி சந்திரனிடம் மனு அளித்தனர்.
இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். மனுவினை பெற்றுக் கொண்ட சீனியர் எஸ்பி சந்திரன், மேல்சாத்தமங்கலம் பிரச்னை குறித்து விசாரித்தபின்னர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.