தலித் தேசியம்

சுட்டெரிக்கும்  சூரியனின் கடும் வெயிலில், முதுகொடிக்கும் கடும்பனியில் வயல்களிலே வேலைசெய்யும் தலித் தொழிலாளர்களுக்கு  நாவரண்டால் அங்குள்ள தமிழக அரசு அளித்திருக்கும் இலவச மின்சார செட்டின்  மூலமாக தொட்டியில் வந்துவிழும்  தண்ணீரை அள்ளி பருகிவிட முடியுமா?  நாவே வெளியே வந்தாலும் தங்கள்  எஜமானர்களான விவசாய வெள்ளாள  சூத்திரர்கள்  வரும் நேரம் பார்த்து அவர்களின்  கடைக்கண்ணின் பார்வைக்காக காத்திருந்து, அவர்கள் எட்ட நின்று ஊற்றும் தண்ணீரை  கையொட்டி பருகவேண்டும். வேலை செய்யும் விவசாய வயல்களிலே உள்ள கிணறுகளை வெட்டுபவர்கள் தலித்துக்குள், ஆடுமாடுகளுக்கு சாணி அள்ளுவது முதல் அனைத்து விவசாய பண்ணை வேலைகளையும் கால வரையறை இன்றி சொற்ப கூலிக்கு செய்பவர்கள் தலித்துகள். ஆனால் அவர்களுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் அள்ளி குடிக்க முடியாது, அப்படியும் மீறி தாகம் பொறுக்காமல் தொட்டியில் அள்ளி குடித்துவிட்டால் உயிரோடு எரித்து கொல்லப்படுவார்கள்,குடிசைகளும் தீக்கிரையாக்கப்பட்டு சாம்பல் மேடாகிவிடும். இது மட்டும் தான் தலித்களின் பிரச்சனை அல்ல, இது ஆயிரத்தில் ஒன்றுதான். வலி தாங்காமல் கொஞ்சம் முருவினாலோ,முனகினாலோ நம் தலை மீதி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜாதிக்கத்தி நொடிப்பொழுதில் நம்மை தலைவேறு முண்டம் வேறு என்று ஆக்கிவிடும்.
 
எம் தலித் சகோதரர்களே  நாம் வாழும் இந்த தலித் தேசியத்தையும்  உங்கள் ஒய்வு நேரங்களில் மனமிருப்பின் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்.