19 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம், மந்திரி ராஜினாமா ?

ஒடிசா மாநிலம் பிபிலி பகுதியைச் சேர்ந்த 19 வயது தலித் மாணவியை 4 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் போராட்டத்தில் குதித்ததால், இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட்டது. 
இதையடுத்து, கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, குற்றவாளிகளை காப்பாற்ற ஒடிசா வேளாண்துறை அமைச்சர் பிரதீப் மகரதி காப்பாற்ற முயன்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது பெரும் பிரச்னையாக வெடித்தது. இதனால், பிஜு ஜனதா தள கட்சியின் கவுரவத்தை காப்பாற்ற பதவியை ராஜினாமா செய்வதாக பிரதீப் நேற்று அறிவித்தார். அதற்கான கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் அளித்தார். 

ஒடிசாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ‘‘அமைச்சரின் ராஜினாமா கண்துடைப்பு. இச்சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.