தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. தலித் மக்கள் அமைப்புகளில் ஒன்றான தேவந்திர குலத்தை சேர்ந்த இவர் சாதி குழு மோதல்களின் தொடர்ச்சியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன், தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தலித் தலைவராக வலம் வந்தவர். இவரது கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டபிடாரம் தாலுகாவை சேர்ந்த மேல அரசரடி பஞ்சாயதிற்குட்பட்ட மேல அரசரடி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் ஸ்ரீகாளியம்மன் சங்கரேஸ்வரி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிலை சிலர் இடித்துள்ளதாகவும், மேலும் குடியிருப்புகளை இடிக்க முயற்சித்து வருவதாகவும், அருந்ததி இனத்தவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.முற்றுகையில் உழைக்கும் உழைக்கும் மக்கள் எழுச்சிப் பேரவையின் மாநில செயலர் தர்மர் தலைமையில் கருப்பசாமி, உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவினை ஆட்சியர் ஆஷிஸ்குமாரிடம் அளித்தனர்.