தலித் விடுதலைக்கட்சி பொதுக்கூட்டம்

அனுப்பர்பாளையம்; மேற்கு தமிழகத்தில் அருந்ததியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து, தலித் விடுதலைக்கட்சி மற்றும் அம்பேத்கர் பொதுத் தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் பெருமாநல்லூர் நால்ரோட்டில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. 
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றியக்குழு கனகசபாபதி முன்னிலை வகித்தார்.  தலித் விடுதலைக்கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநில துணைப் பொது செயலாளர் பழ.சண்முகம், மேற்கு மண்டலச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மாநில இளைஞரணிச்செயலாளர் விடுதலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்ட இறுதியில், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.
பட்டாவுக்கான நிலம் ஒதுக்கித்தர கோரிக்கை
திருப்பூர்: மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது அவிநாசி பழங்கரை கிராமம் இந்திரா நகர் தேவம்பாளையம் ஊர் பொதுமக்கள் கலெக்டர் மதிவாணனிடம் வழங்கிய மனு: எங்களுக்கு 2001ம் ஆண்டு ச.எண் 277/2சி எண் உள்ள நிலத்தில் பட்டா வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நாற்பது பேருக்கும் வெளியூர் மற்றும் திருப்பூர் அருந்ததியர் 80 பேருக்கும் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.  5 அடி ஆழமுள்ள பள்ளமான பகுதியில் உள்ளூர் மக்கள் 15 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கி பல மாதங்களாகியுள்ள நிலையில் எங்களுக்கு இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக இந்த நிலத்தை அளவு செய்து பட்டாவின்படி மேடான பகுதியில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். இவ்வ £று அதில் கூறப்பட்டுள்ளது.