இது எப்போது மாறும்,

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கேட்ட தலைவர்களையும் இயக்கங்களையும் பார்கையில். சக்கிளியனாக பிறந்த பாவமா? அல்லது சமுதாய கல்வியை கற்றதா? அல்லது மலம் அல்லும் எனது சொந்தங்கள் அடிமையாக இருகிறார்கள் என்று தெரிந்ததனால? அல்லது இது ஒரு சாதிய சமுதாயம், அனைவரும் சாதியவாதிகள் என்று தெரிந்துகொண்டதனால? இந்த கேளிவிகளுக்கு பதில் தெரிந்ததனால? ஐயோ என்ன செய்வேன், ஏன் எனது தாய் தந்தை மற்றும்  என் சமுகம் மட்டும் மலம் அள்ளுகிறார்கள் என்று தினம் தோறும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததினால?  சாதியை ஒழிக்க நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லும் ஒவொருவரும் அயோக்கியனாக தெரிகிறார்களே. ஏன்? 
அரசியல் என்ற சாக்கடையை நாங்கள்  மறுக்கிறோம் என்று குறும் தலித் இயக்கங்கள் ஏன் ஜெயலலிதா, கருணாநிதியின் வாழை பிடிகிறார்கள் எதற்காக? அவர்கள் சார்ந்த சமுக விடுதளைய்காகவா?  அப்படி இருந்தால் ஏன் வாழ் பிடிக்கவேண்டும். தேர்தலின் பொழுது அணைத்து அருந்ததியர் இயக்கங்கள் சென்னையில் குடி இருக்கிறது. ஏன்? 

சில இயக்கங்கள் பணத்தை வாங்கி கொண்டு எனது  அருந்ததியர் சொந்தங்களை விற்கிறார்கள் ஏன்? இந்த கேள்விகள் அனைத்துக்கும்  பதிலாக இருக்கும் தலித் இயக்கங்களின் செயல்பாடுகள், பின்பு ஏன் அம்பேத்கரையும், பெரியாரையும் கேவலபடுதவேண்டும். ஒரு இயக்கம் அரம்பிகிரார்கள் என்றால்  என்ன அர்த்தம். எங்கு எங்கு ஒடுக்கப்பட்ட சமுகம் இருக்கிறதோ அங்கு சென்று இயக்கத்தை கட்டி எழுபவேண்டும். அதாவது மக்களை தேடி இயக்கங்கள் இயங்கவேண்டும்.  
என் அனுபவம், அருந்ததியர் இயக்கங்கள் அவர்கள் சென்று கிளை கட்டி எழுப்ப மாட்டார்கள் ஏன் என்றல் அவர்களுக்கு தலைவர் என்ற தலைகனம். இந்த தலைவர்கள், கூட்டம்  கூடினால் சென்று பேசுவார்களே தவிர இவர்கள் கூட்டம் சேர்த்த மாட்டார்கள். புதுச்சேரியில் உள்ளவர்களும் சரி அல்லது எனது ஊர் உதகையிலும் சரி, இந்த அருந்ததியர் இயக்கங்கள் அங்கு வந்து அருந்ததியர் மக்கள் விழிப்படைய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யமாட்டார்கள். 

அனைவரும் சொல்வது, மக்களிடம் பேசி இயக்கத்தையோ அல்லது ஒரு கூடதையோ சேர்த்து வைத்தால் நாங்கள் வந்து  இயக்கத்தை திறக்க வருகிறோம். அப்பொழுது ஒரு சராசரி மனிதனுக்கு தோன்றுவது, இயக்கத்தை நாம் கட்டி எதற்கு அடுத்தவர்களை குப்பிட்டு ஆரம்பிக்கவேண்டும். அதற்கு நாமே இயக்கத்தை கட்டி நாம் ஏன் அதை கவனிக்க குடாது. ஆகவே, நமது தலைவர்களுக்கு ஆணவம்,  இந்த ஆணவம் பிடித்த தலைவர்கள் சந்தோசமாக வந்து மேடையில் வாய் கிழிய புரட்சி பேசுவார்களே தவிர, மக்களுக்கு என்று பயன்படமாட்டார்கள். 

இங்கு ஒன்று சொளியகவேண்டும அதாவது, ஒவ்வொரு  அருந்ததியர் இயக்கமும் தொடக்கத்தில் நன்றாகதான் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு அங்கிகாரம் கிடைத்தால் போதும். என்னமோ இந்திய பிரதமருக்கு  ஆணவம் இவர்களுக்கு வந்துவிடும். இந்த இயக்கங்களுக்கு சாதியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. (ஆதி திராவிடர், தேவேந்திரர்களின்  அரசியில் இதை விட கேவலமாக உள்ளதால் அவர்களை பற்றி நான் இங்கு பேச வில்லை, அதை அந்த சமுகம் பேசட்டும். என் சமுகத்தை பற்றி நான் பேசுகிறேன்)

இதில் குறிப்பாக நான் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒண்டிவீரன் மாநாடு சிறப்பாக அமைந்தது எப்படி? காரணம், முன்று அருந்ததியர் இயக்கங்கள் ஒரே நாளில் இந்த மாநாட்டை நடத்தவேண்டும் என்று குறி, முன்று இயக்கங்கள் ஒன்றாக கூடியதினால்  அங்கு கூட்டம் அலைமோதியது. 
அக்கா க்ரிஷ்ணவேநிகாக ஒரு பேரணி நடந்தது சென்னையில், முதலில் அண்ணன் மதிவாணன், அய்யா அதியமான், அண்ணன் ஜக்கையன் ஆகியோர் சேர்ந்து நடத்தலாம் என்று சொனார்கள். பின்பு இந்த தலைவர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் கருத்து  உடன்பாடிலாமல் தனியாக நடத்தினார்கள். அண்ணன் மதிவண்ணன் இயக்கம் தொடங்கி ஒன்றரை வருடம் இருக்கும் அவர் சென்னையில் பேரணி நடத்தினார். அந்த பேரணையில் சுமார் ஐநூர் பேர் இருந்திருபார்கள். அண்ணன் ஜக்கையன் மற்றும் அண்ணன் அதியமான் அவர்கள் இயக்கம் தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது. இவர்கள் இருவருக்கும் கூடிய கூட்டம் சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூர் வரை. இது எதை குறிக்கிறது.

இந்த முவரும் ஒரு சேர கூட்டம் நடத்தி இருந்தால் எப்படி  இருந்திருக்கும். இப்பொழுது என்ன நடந்திருகிறது என்றால், கிருஷ்ணவேணி அக்காவுக்கு நியாயம் அந்த பேரணியில் கிடைக்கும் என்று சொல்லமுடியாது, ஆனால் இந்த இயக்கங்கள், சந்தோசமாக விளம்பரம் செய்யலாம், இது எதை குறிக்கிறது என்று நாம் சிந்திக்கவேண்டும்.

இதைபோள்ள ஒண்டிவீரன் மாநாட்டில் இரு அருந்ததியர் இயக்கங்கள் நடுரோட்டில் அடிதுகொண்டன, இதில் மிகவும் அதிர்ச்சி ஆனா தகவல் என்வென்றால் இந்த இரு இயக்கங்களின் ஒரு தலைவர் முன்பே இன்னொரு இயக்க  தோழர்களை அடிதிருகிரார்கள் என்று. ஒரு பொது இடத்தில பொதுமக்கள் பார்க்கும் பொழுது ஒரு அருந்ததியர் இயக்கம் இனொரு அருந்ததியர் இயக்கத்தை அடித்தால் என்ன  அர்த்தம்? நமது இயக்கங்கள் எப்படி  செயல்படுகிறது என்று சிந்திக்கவேண்டும.

இது மட்டுமல்லாமல், அடித்தபின்பு உருக்கு சென்று அனைவரிடமும் நாங்கள் அவர்களை அடித்தோம் என்று மார்தடிகொல்கிரார்கள் , என்ன கேவலம்? இவர்கள்தான் அருந்ததியர்களின் அரசியல் விடுவுக்கு போராடுகிறார்கள? 

பல முன்னோடி அருந்ததியர் இயக்கங்கள் சி பி எம் இடம் சுமுகமான உறவை வைத்து இருகிறார்கள். எப்பொழுது பார்த்தாலும் சி பி எம்ஐ இவர்கல் நாடுகிறார்கள். அந்த தலைவர்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும். நீங்கள் சி பி எம் இடம்  செல்வதில் பல அரசியல் கரணங்கள் உள்ளது என்று. அதை நாங்கள் மதிகிறோம். அதாவது, இவர்கள் தேசிய கட்சி, மற்றும் இவர்களிடம் மீடியா பவர் உள்ளது, மற்றும் பத்து எம் எல் லே கல் உள்ளார்கள் என்று. அருந்ததியர்களின் பிரச்சனையை கூட இவர்கள் நன்றாக எடுகிறார்கள். 
நான் கேட்பது, இந்தனை அவர்களிடம் உள்ளத்தால் ஏன் அருந்ததியர்கள் சி பி எம் இடம் செரகுடாது, எப்படியோ இந்த அருந்ததிய தலைவர்கள் சி பி எம் இன் உதவியை நாடுகிறார்கள். ஆகவே இந்த தலைவர்கள் சி பி எமிடம் செல்வதால், நமது தோழர்கள் நேரடியாக சி பி எமிடம் போவதில் தப்பு இல்லை. 

ஆகா ஒன்று மற்றும் தெரிகிறது, தலைவர்களுக்கு தனியாக நின்று சமுக விடுதலையை கேட்க முடியாது. அதற்கு முதுகெலும்பு தேவை முதலில், இது இவர்களிடம் உள்ளத என்று அவர்கள் சிந்திக்கட்டும். 


என் சமுகம் எப்பொழுது விடியலுக்கு வரும், எப்பொழுது இந்த தலை கணம் பிடித்த தலைர்கள் மாரபோகிரார்கள். எப்பொழுது இந்த தலைவர்கள் ஒருமுறையாவது தனுடைய சமுகத்தை முன்னேற்ற பாடுபடுவார்கள. ஆதாவது இதனால் வரையிலும் இவர்கள் இயக்கங்களை கட்ட பார்கிறார்கள், மற்றும் ஒரு அரசியல் வாதிகளை போல் நடக்கிறார்கள். 

இது எப்போது மாறும், இதை எல்லாம் நினய்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.