சிலம் பாட்டம்


ஒண்டிவீரன் மாநாட்டில் நடந்த இயக்கத் தோழர்களின் மோதலை,
தனக் களித்த, இளம் அருந்ததிய வீரர்களின் சிலம் பாட்ட வரவேற்பு
என்று அத் தலைவர் நினைத்திருக்க கூடும் என நாம் நினைத்து,
ஐயத்தின்  பலன் அளித்து  இப்பிரச்சனைக்கு
இத்தோடு முற்றுபுள்ளி வைத்திடுவோம்.
 
கூட்டாளி ஆவதற்கு உமியல்ல, குறைந்த பட்சம்
குருணை ஆவது கொண்டு வரவேண்டும் என
பொன்னி அரிசி கொண்டுவரும் அருந்ததிய
பெரும் இயக்கத்தின் தலைவரின்
எதிர்பார்ப்பில் நியாயம் இல்லாமல் இல்லை.
 
தன்னை இணைக்க மட்டோம் ஆனால்
கூட்டாளி ஆகவேண்டும் என அடம் பிடிக்கும்,
நம் அன்புத் தம்பிகளின் உமிகளையும் உரமாக்கி
பேரவையை வளர்த்தால் நாம் தேடும் அருந்ததியர் 
விடுதலையும் நம் வாழ்நாளில்  சாத்தியமே. 
 
தோழர்களே, சுய நலமே எமது நலம் என்றால்
வார்டு உறுப்பினராகக்  கூட வெற்றி பெறமுடியாது,
அருந்ததியர் விடுதலையே நமது நலம் என்றும்,
தலைவர் என்ற தலைக் கணமும்  இல்லாமல்
கடுமையாக உழைத்திட்டால் பிரதமர் பதவி கூட
உங்களை தேடி வரும்.
 
மானத்தை மறைக்க கோவணத்தை கட்டிக்கொண்டு
பசியடக்க வாயினிலே புகையிலையை அடக்கிக்கொண்டு
எவன் எவனோ கழனிகளில் அவன் கொழுக்க உழைக்கும்
எம் அருந்ததிய சொந்தங்களே
 
நாம் வளர்த்த ஆட்டை வெட்டி தட புடலாய்
தேர்தல் கால விருந்து வைக்கும் கோமல வள்ளிகளின்
மாளிகையின் மதில் சுவரை முகாமிட்டு சுற்றிவரும் நமக்கு
இவர்கள் மென்று துப்பும் எலும்புத்துண்டை மட்டுமல்ல
எச்சில் இலையைக் கூட நாம் நிற்கும் திசை நோக்கி வீசமாட்டார்கள்
என்று அறிந்திருந்தும் நீ அங்கு போவது ஏனோ?
 
இவ் விருந்துக்கு வரவழைத்து தலை வாழை இலைவிரித்து
மூக்கு முட்ட தின்று ஏப்பம் விட்டு வெளியேறும்
கிருஷ்ணாவும், திருமாவும் வெளியில் நிற்கும் நம்மை பார்த்து
தமிழர் அல்லர்  மனிதர் அல்ல தாழ்ந்து பிறந்த இனம்  
என்று ஏசுவதை கேட்டாயா? ஏன் என்று சிந்தித்தாயா?
 
நமக்குள்ளே ஆயிரம் குறைகள் இருந்தாலும்,
அருந்ததியர் விடுதலையை தவிர வேறெதுவும் இல்லை  என்றால்,  
நான்கு சுவர்களுக்குள் தீர்க்க முடியாத
குறை ஏதும் உண்டோ?
 
வாருங்கள் அருந்ததிய சொந்தங்களே
அண்ணன் அதியமான் கரத்தை வலுப்படுத்தி
மலக்குழியில் தத்தளிக்கும் நம் சொந்தங்களை மீட்டிடுவோம்
 
-செல்வா